சினிமா

என்னது நடிகர் கார்த்தி அடுத்ததாக இந்த இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா... அப்ப படம் சூப்பர் ஹூட் தான்... வில்லன் யார் தெரியுமா.?

Summary:

என்னது நடிகர் கார்த்தி அடுத்ததாக இந்த இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா... அப்ப படம் சூப்பர் ஹூட் தான்... வில்லன் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முதன் முதலில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கார்த்தி. இவர் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்து இன்று புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

தற்போது நடிகர் கார்த்தி கைவசம் விருமன், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் போன்ற படங்கள் உள்ளன. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி முதல் முறையாக சென்சேஷன் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ராஜு முருகன் இதற்கு முன்னதாக வெளிவந்த குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய சென்சேஷன் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement