தங்கக்கடத்தல் குருவியாக நடிகை.. கிடுக்குபிடிக்கு தயாராகும் அமலாக்கத்துறை..!



Kannada Actress Ranya Rao arrested 


கன்னட நடிகையான ரன்யா ராவ், பெங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரூ.2 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்க கட்டிகளை அவர் கடத்தி வந்தபோது, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததைத்தொடர்ந்து, விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்களை கொண்டு வரும் குருவி போலவும் செயல்பட்டு இருக்கிறார். 

Ranya Rao

தமிழ் படத்திலும் நடித்துள்ளார்

பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நடிகை, ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்தார். ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, 4 நாட்கள் விசாரணைக்கு முயற்சித்து வாதாடி வருகிறது. 

இதையும் படிங்க: #Breaking: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. வீட்டின் கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்., மருத்துவமனையில் அனுமதி.!

நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 8 முறை துபாய் சென்று வந்த நடிகை, விமான நிலைய கட்டுப்பாடுகளை எப்படி கடந்து வந்தார்? எனவும் கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், தமிழ் மொழியில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்தில், இவர் நாயகியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!