"பிட்டு படத்தில் நடிப்பீர்களா?"... யூடியூபர் கேட்ட கேள்வி; நடிகையின் தரமான செய்கை.. கொந்தளிப்பில் ரசிகர்கள்.!

"பிட்டு படத்தில் நடிப்பீர்களா?"... யூடியூபர் கேட்ட கேள்வி; நடிகையின் தரமான செய்கை.. கொந்தளிப்பில் ரசிகர்கள்.!


kannada-actress-complaint-against-youtuber

 

இடம்-பொருள்-ஏவல் என்ற வார்த்தைகளை கருத்தில் கொண்டு பேசாவிட்டால், தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப யூடியூப் நெறியாளர் வார்த்தையால் வழக்கில் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கன்னட திரையுலகில் சிறிய அளவிலான கதாபாத்திரத்தில் துணை நடிகை வேடத்தில் நடித்து வரும் நடிகை, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். 

அந்த பேட்டியில், நெறியாளராக இருந்த சுஷாந் என்பவர், நடிகையிடம் நீங்கள் ஆபாச படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

kannada actress

இக்கேள்வியால் மனதுடைந்துபோன நடிகை, பேட்டி குறித்த காணொளி வெளியாகும் வரை காத்திருந்து யூடியூபருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற மல்லேஸ்வரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் யூடியூபர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.