சினிமா

திரையுலக மாஃபியாவின் முக்கிய குற்றவாளியே இவர்தான்!! ஆவேசத்துடன் கொந்தளித்த தாம்தூம் நடிகை!

Summary:

Kangana ranavut tweet about karan johar

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திரையுலகில் வாரிசு அரசியல் அதிகாரத்தால்தான் மன உளைச்சலில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த  மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.   

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு நடிகை கங்கனா ரணாவத் வாரிசு நடிகர்கள், நடிகைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் மோசமாக விளாசி வந்தார்.  அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் அனைத்து பார்ட்டிகளிலும் போதைபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. போதை பொருள் தடுப்பு போலீசார்கள் பாலிவுட் உலகில் நுழைந்தால் பல பிரபலங்கள் சிறைக்கு செல்வார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவரும் என கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில் அவர் தற்போது  தனது டுவிட்டர் பக்கத்தில், 
திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர். அவர் பலரது வாழ்க்கையையும், வேலையையும் நாசமாக்கிய பிறகும் கூட சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என தெரிவித்துள்ளார். 


Advertisement