பாலிவுட் பார்ட்டிகளில் இதுதான் நடக்கும்! ரத்த டெஸ்ட் செய்தால் எல்லாம் தெரியவரும்! தாம்தூம் படநடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

பாலிவுட் பார்ட்டிகளில் இதுதான் நடக்கும்! ரத்த டெஸ்ட் செய்தால் எல்லாம் தெரியவரும்! தாம்தூம் படநடிகை வெளியிட்ட பகீர் தகவல்!


kangana-ranavut-tweet-about-drugs-in-bollywood

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தற்கொலை கிடையாது கொலை என பலரும் சந்தேகமடைந்தனர். இந்நிலையில் தற்போது  சுஷாந்தின் மரணம் குறித்து  சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மேலும் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் போதைப்பொருள்  குறித்து நடிகை கங்கனா ரனாவத் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

kangana ranavut

அதில், பாலிவுட் உலகில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன். வீடுகளில் நடக்கும் அனைத்து பார்ட்டிகளிலும் அவை  பயன்படுத்தப்படுகிறது. அது மிகவும் விலையுயர்ந்தது. ஆனால் முன்னணி நடிகர்கள் நடத்தும் பார்ட்டிகளுக்குச் சென்றால் இலவசமாகவே வழங்கப்படும். 

எம்.டி.எம்.ஏ படிகங்களை தண்ணீரில் கலந்து உங்களுக்கு தெரியாமலே தருவர். இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு உதவ நான் தயாராக உள்ளேன். ஆனால் இதனால் எனது கேரியருக்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.போலீசார் பாலிவுட் உலகிற்குள்  நுழைந்தால் பல பிரபலங்கள்  சிறைக்கு செல்வார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவரும் என கூறியுள்ளார்.