எனக்கு நிம்மதி கிடைக்கும் ஒரே இடம் அதுதான்! வெளிப்படையாக மனம்திறந்த தாம்தூம் நாயகி!

எனக்கு நிம்மதி கிடைக்கும் ஒரே இடம் அதுதான்! வெளிப்படையாக மனம்திறந்த தாம்தூம் நாயகி!


kangana-ranavut-talk-about-shooting-spot

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம்தூம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் கங்கனா ரனாவத் சமீப காலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மேலும் கங்கனா இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்து வருகிறார். ஆனால்  கொரோனோ அச்சுறுத்தல் ஊரடங்கு காரணமாக தலைவி படப்பிடிப்பு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து தற்போது தலைவி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், அனைவருக்கும் வணக்கம். இவை நேற்று அன்பான, திறமையான இயக்குனர் விஜய்யுடன் பேசிக்கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படங்கள். உலகில் அற்புதமான இடங்கள் எவ்வளவோ இருக்கலாம். ஆனால் எப்பொழுதுமே எனக்கு மிகவும் நிம்மதியான, வசதியான இடமென்றால் அது படப்பிடிப்புதளம் மட்டும்தான் என கூறியுள்ளார்.