ஜெயலலிதாவாக மாறிய தாம்தூம் நாயகி! அதற்காக அவர் இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாரா? புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்!

நடிகை கங்கனா ரனாவத் தலைவி படம் குறித்த தனது அனுபவங்களை கூறியுள்ளார்.


kangana-ranavut-share-experience-of-thalaivi-movie

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்  இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் ஜெயலலிதாவாக தாம்தூம் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கொரோனோ ஊரடங்கால் தடைபட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா, அந்த தோற்றத்துக்கு வருவதற்காக தான் பட்ட கஷ்டங்களை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், 30 வயதுக்கு மேல் தலைவி படத்திற்காக என்னுடைய உடல் எடையை 20 கிலோ அதிகரித்தேன். மேலும் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் எனது முதுகில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடிப்பதை விட மற்ற எதுவும் எனக்கு திருப்தியை தராது. எனது உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது எளிதான ஒன்றல்ல என கூறியுள்ளார்.