சினிமா

அம்மா மறைவால் வாடும் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! எப்போது தெரியுமா? அவரது அப்பா வெளியிட்ட தகவல்!!

Summary:

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டு வி

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருபவர் கங்கைஅமரன். இவரது மகன் பிரேம்ஜி. இவரும் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவருக்கு திருமணம் எப்பொழுது? என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர், தான் முரட்டு சிங்கள் என அடிக்கடி கூறுவார்.

இந்நிலையில் பிரேம்ஜியின் தாயார் அண்மையில் காலமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டியளித்த கங்கை  அமரன், எனது மனைவி பிரேம்ஜிக்கு திருமண செய்து பார்க்க மிகுந்த ஆசையில் இருந்தார். ஆனால் பிரேம்ஜிதான் மறுத்துக் கொண்டே வந்தார். அம்மாவின் இறப்பிற்கு பின் அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். 

இந்நிலையில் தனது அம்மாவின் கடைசி ஆசைக்காக பிரேம்ஜி தற்போது திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். தற்போதுதான் அவருடைய அம்மா இறந்துள்ளதால் அந்த சோகம் முடிந்த பிறகு, இன்னும் ஒரு வருடத்தில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம். அவருக்கேற்ற பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், சரியான பெண் அமைந்ததும் விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement