ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன விசு பட நடிகை கமலா! கமலா இந்த பிரபலத்தின் அம்மாவா!

Kamala


kamala

80களில் பல படங்களில் அமைதியான அம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை கமலா காமேஷ். இவர் சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் விசுவுக்கு ஜோடியாக சாதுவான அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். இதுவரை இவர் 400க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிப்பிலிருந்து விலகினார். காரணம் படப்பிடிப்பின் போது இடுப்பில் அடிபட அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

kamal

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இவரது மகளான உமா ரியாஸ் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் 80களில் கலக்கிய நடிகையா இது. ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.