அடேங்கப்பா..வேற மாறி! அரங்கத்தையே ஆச்சரியத்தில் மூழ்கடித்த உலக நாயகன்! வைரலாகும் வீடியோ!!

அடேங்கப்பா..வேற மாறி! அரங்கத்தையே ஆச்சரியத்தில் மூழ்கடித்த உலக நாயகன்! வைரலாகும் வீடியோ!!


Kamal in super singer junior video viral

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு மக்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் குழந்தைகள் பலரும் தங்களது அசாத்திய பாடல் திறமையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் கமல், விக்ரம் படத்தின் பிரமோஷனுக்காக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்பொழுது தொகுப்பாளினி பிரியங்கா கமலிடம் அவருக்கு தெரிந்த மொழிகள் குறித்து கேட்டபோது, தனக்கு தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மற்றும் கன்னடம் எழுதப்படிக்கத் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் தமிழ், ஆங்கிலத்தை வைத்து காலத்தை கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் நடிகர் சிவாஜி கணேசன் 3வது வகுப்பு வரை படித்துள்ளார். தான் 8வது படித்திருப்பதால் 5 வகுப்புகள் வித்தியாசத்தால் அவர் தன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வதாக கூறுவார் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பல விஷயங்களை பகிர்ந்து அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.