செம்ம காம்பினேஷன்.! பா ரஞ்சித்துடன் இணையும் கமலஹாசன்.? அடுத்த படம் சூப்பர் ஹிட் தான்.!?

செம்ம காம்பினேஷன்.! பா ரஞ்சித்துடன் இணையும் கமலஹாசன்.? அடுத்த படம் சூப்பர் ஹிட் தான்.!?


Kamal hasan like to work with pa ranjith

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகராக இருந்து வருபவர் கமலஹாசன். இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். தற்போது வரை தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக நடித்து பல ஹிட் திரைப்படங்களை அளித்துள்ளார். தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த கமலஹாசனை உலக நாயகன் என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

p ranjith

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியான 'விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதற்கு முன்பாக தொடர் தோல்வி படங்களை அளித்து வந்த கமலஹாசனுக்கு விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்திற்குப் பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வருகிறார் கமலஹாசன். தயாரிப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும் சினிமாவில் கலக்கி வரும் கமலஹாசன் அரசியலிலும் கால் பதித்து தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

p ranjith

மேலும் கதாநாயகனாக இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமலஹாசன் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள கமலஹாசன் தற்போது பா ரஞ்சித்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாகவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.