கமல்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு இதுவா? தீயாய் பரவிவரும் தகவல்!Kamal haasan flim with logesh kanagaraj title

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி  மற்றும் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் ஆகிய மூன்று படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் 3 படத்திலேயே முன்னணி இயக்குனராக புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் தள்ளி போயுள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ரஜினி அண்ணாத்த படத்தில் பிஸியாக இருப்பதால் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது. 

Logesh kanagaraj

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவதாக நேற்று தெரிவித்திருந்தார்.  இதற்கிடையில் கமல் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்திற்கு எவனென்று நினைத்தாய் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.