வைரமுத்துவை தொடர்ந்து பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றசாட்டு...!



kalyan-master-asked-me-sleep-with-him-says-sri-lankan-woman

வைரமுத்துவை தொடர்ந்து பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றசாட்டு...! 

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் ட்ரென்டாகி விட்டது போல. அதிகளவான பாலியல் புகார்கள் வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் பாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சின்மயிக்கு அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை: டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் சினிமா துறையே வேண்டாம் என கூறியதாகவும், கல்யாண் மாஸ்டரால் தன் நடன கனவை தொலைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.