சினிமா

திருமணம் முடிந்த கையோடு நடிகை காஜல் எடுத்த அதிரடி முடிவு! அதுவும் எதற்காக பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

காஜல் அகர்வால் ஆச்சார்யா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக தனது தனது ஹனிமூனை தள்ளி வைத்துள்ளாராம்.

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இவற்றில் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அவர் ஹனிமூன் செல்வார் என எதிர்பார்த்த நிலையில் காஜல் ஆச்சார்யா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அதற்காக ஹனிமூன் செல்வதை தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் படத்தின் சூட்டிங் முழுவதும் முடிந்த பிறகே அவர் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Advertisement