கொரோனாவுக்காக நிதியுதவியை வாரி வழங்கிய காஜல்அகர்வால்! பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!kajal-corona-relief-fund

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிவாரண உதவி அளிக்குமாறு அறிவுறுத்தினார். 

இந்தநிலையில் பல பிரபலங்கள் மதிய, மாநில அரசுகளுக்கு நிவாரண உதவியை வாரி வழங்கினர். அதேபோல் விருவிருப்பாக போய்க்கொண்டிருந்த சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

kajal

அந்தவகையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட ஃபெப்சி தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கினார். 

அதேபோல் கொரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் அவர் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கியதுடன் தன்னிடம் உதவி கோரிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கும் உதவி செய்துள்ளார். காஜல் மொத்தமாக 6 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.