சினிமா

காதலர் தினத்தை கணவருடன் வேற லெவலில் வித்தியாசமாக கொண்டாடிய நடிகை காஜல்!! எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா??

Summary:

தமிழ் சினிமாவில் பழனி திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது

தமிழ் சினிமாவில் பழனி திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால், கார்த்தி என்று டாப் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்

இந்த நிலையில் காஜல் அகர்வால் கொரோனா லாக்டவுனின் போது கௌதம் கிச்சலு என்பவரை மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்துக்குப் பிறகும் நடித்து வரும் காஜல் கைவசம் தற்போது ஹே சினாமிகா, மொசகல்லு, ஆச்சார்யா, மும்பை சாகா, இந்தியன் 2, கோஸ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் காதலர் தினத்தன்று பிரபலங்கள் பலரும் வெளிநாட்டிற்கு, பிரபல நட்சத்திர உணவகத்திற்கு சென்று கோலாகலமாக கொண்டாடிய நிலையில் நடிகை காஜல் வித்தியாசமாக தனது கணவருடன் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ்க்கு சென்றுள்ளார். 

அத்தகைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த அவர், பொள்ளாச்சி சாந்தி உணவகம் எனக்கு மிகவும் பிடித்த உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா எனக்கு மிகவும் பாசத்தோடு உணவை பரிமாறுவார்கள். கடந்த 27 வருடங்களாக சுவை மாறாமல் அதே அருமையான சுவையுடன் இந்த உணவகத்தை நடத்துகின்றனர். நான் இங்கு கடந்த 9 ஆண்டுகளாக வந்து செல்கிறேன் என்று பெருமையாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement