காஜல் அகர்வால் அரசியலுக்கு வருகிறாரா? காஜல் கூறிய விளக்கம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலிடம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாமே என்று கேட்டபோது, எல்லா நடிகைகள் அப்படி நடிக்கிறார்கள் என்பதற்காக நான் அப்படி நடிக்க மாட்டேன். எனக்கு எது சிறந்த கதை என்று தோன்றுகிறதோ அதை தேர்வு செய்வேன் என கூறியுள்ளார். மேலும், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேட்டபோது 'எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. இப்போது எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் என கூறியுள்ளார்.