காஜல் அகர்வாலின் வித்தியாசமான போட்டோ சூட்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

காஜல் அகர்வாலின் வித்தியாசமான போட்டோ சூட்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!



Kajal Agarwal photoshoot viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் காஜல் அகர்வால்.

kajal

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால், பல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.

kajal

இது போன்ற நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்