தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
காட்டுக்குள் போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!
தமிழ் திரை துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், தமிழில் இருந்து தெலுங்கு மலையாளம் போன்ற மொழி சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். இதன் பின் தற்போது மீண்டும் நடிக்க களமிறங்கிய காஜல் வெப் சீரீஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சமூகவலைதளங்களிலும் பிசியாக இருந்து வரும் காஜல் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுக்குள் போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.