கைதி படம் முதலில் இந்த வில்லன் நடிகருக்காக தான் உருவாக்கப்பட்டதா..! யார் அவர் தெரியுமா?Kaithi movie muthaliil intha nadikarukagathan uruvagapittatha

தமிழ் சினிமாவில் வளர்ந்து, பிரபலமாகி வரும் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி படம் கடந்த தீபாவளி அன்று திரையில் வெளியாகி மெகா ஹிட் அடித்து, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

kaithi

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முதலில் கைதி படத்தின் கதையானது வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அவருக்காக தான் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார். ஆனால் தயாரிப்பாளரின் வேண்டுக் கோளுக்கு இணங்க நடிகர் கார்த்தியை நடிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.