சினிமா

கடல் படநாயகி கொழுகொழு துளசி நாயரின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!

Summary:

kadhal movie actress thulasi latest photo

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராதா. இவர் 70 மற்றும் 80 களில் மாபெரும் முன்னணி நடிகையாக ஜொலித்தவர். இவரது மகள் கார்த்திகா மற்றும் துளசி. 

மூத்தமகள் கார்த்திகா ஜீவாவுடன் இணைந்து கோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் அன்னக்கொடி,  புறம்போக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். 

  

நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் அவர் தனது 14 வயதிலேயே கௌதம் கார்த்திக்குடன் இணைந்து கடல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் யான் திரைப்படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்தார். பின்னர் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியாதநிலையில் அவர் நடிப்பை விட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டார்.

அதனை தொடர்ந்து துளசி நாயர் தற்போது Podar International School என்ற கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் மேலும் அவர் தற்போது உடல் எடை அதிகரித்து குண்டாக காட்சி அளிக்கிறார். இந்நிலையில்  துளசி கல்லூரி படிப்பை முடித்ததும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் துளசி நாயரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது

 


Advertisement