சினிமா

வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே போதும்! அப்படியே அளந்து விட்டாரே! அட்லீயை வெளுத்து வாங்கும் பிரபலம்!!

Summary:

journalist panimalar tweet about atlee

தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.அவர் இதற்கு முன்பு இயக்குனர் ஷங்கருடன் நண்பன், எந்திரன் போன்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் முகப்புத்தகம் என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

 பின்னர் ராஜா ராணி படத்தை தொடர்ந்து அவர் விஜய்யுடன் கூட்டணியில் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் சமீபத்தில் வெளிவந்த பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஷாருகானை வைத்து படம் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.இப்படங்கள் வெற்றியை பெற்ற நிலையிலும் படம் காப்பி அடிக்கப்பட்டது என விமர்சனங்கள் கிளம்பி வந்தது. 

தற்போது வெளிவந்த பிகில் படம் குறித்தும் அவ்வாறே விமர்சனங்கள் வெளிவந்தது. மேலும் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லீ விஜய் எனக்கு அண்ணன். அவருக்காக நான் நன்றாகத்தான் செய்வேன் என பேசி இருந்தார.  ஆனால் படம் வெளியான பிறகு பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான பனிமலர் அட்லி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்தும் அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்து இருக்கமாட்டார் எனவும் பல கருத்துக்களைக் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Advertisement