சினிமா

நாளையுடன் முடிவுக்கு வரும் பிரபல சன் டிவி சீரியல்!! நாளைக்குத்தான் கடைசி..!! எந்த சீரியல் தெரியுமா??

Summary:

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் புது சீரியல் ஒன்று இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் புது சீரியல் ஒன்று இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது.

இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி. சன் டிவியின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி தற்போது அனைத்து தரப்பு மக்களையும் சீரியல் பார்க்க வைத்துள்ளது சன் டிவி.

அதிலும் நாகினி, நந்தினி என பலவிதமான பாம்பு தொடர்களை ஒளிபரப்பி TRP யில் பட்டையை கிளப்பிய சன் டிவி, புதிதாக ஜோதி என்ற பாம்பு தொடரை ஒளிபரப்பிவருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு 9 . 30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ஜோதி சீரியலுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இந்த சீரியலை நாளையுடன் முடிக்கு கொண்டுவருகிறது சன் டிவி. சீரியல் தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் இந்த சீரியல் நாளையுடன் முடிவடைகிறது.


Advertisement