நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி யார் தெரியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 ஆண்டு கழித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், பைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனங்களின் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா, சத்யன், அரவிந்த் ஆகாஷ், பாவா செல்லத்துரை உட்பட பலர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலேயே 5 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. தற்போது வரை ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் ஜிகர்தண்டா 2 படம் இதுவரை 45 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை இயக்கி கார்த்திக் சுப்புராஜ் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறார். தற்போது வெளியான தகவல் படி கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 படத்திற்காக 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.