ரொம்ப சந்தோஷம்.. மிக்க நன்றி தலைவா.! செம ஹேப்பியில் ஜெயம் ரவி!! என்ன விஷயம் தெரியுமா??Jayam ravi tweet about wishes from rajinikanth

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி கடந்த சில காலங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து சாதனை படைத்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவர் மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் ஜெயம் ரவியை அழைத்து  இவரது நடிப்பைப் பாராட்டி வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் உற்சாகமாக, அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாளை சிறப்பாக்கி விட்டது. இத்தனை வருட எனது வாழ்க்கைக்கு, பணிக்கு புது அர்த்தத்தை சேர்த்துள்ளது. உங்களது அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் மிக்க நன்றி தலைவா. நீங்கள் பொன்னியின் செல்வன் படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என அறிந்து நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன். ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.