விவசாயிகளின் வலியை பேசும் ஜெயம் ரவியின் பூமி! இணையத்தை கலக்கும் மிரட்டலான டீசர் இதோ!
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் பூமி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் என்பவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
விவசாயத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரிக்கிறார். இப்படம் மே மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.