தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஜவான் திரைப்படத்தின் வெற்றி... ராக்கெட் வேகத்தில் உயர்ந்த அட்லீயின் சம்பளம்... முன்னணி இயக்குனர்களுக்கு சவால்.!
பாலிவுட் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் வெளியான ஐந்து நாட்களிலேயே 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திரைப்படத்தின் அசுரத்தனமான வெற்றியால் இயக்குனர் அட்லீயின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் அட்லீ தற்போது தெலுங்கு சினிமாவின் பக்கம் சென்று புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றியால் அட்லீயின் சம்பளம் 60 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் சில பாலிவுட் திரைப்படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.