சூப்பரான நியூஸ்.! ஷாருக்கான்- அட்லீ பட தலைப்பு இதுதான்! படம் ரிலீஸ் எப்போ தெரியுமா??

சூப்பரான நியூஸ்.! ஷாருக்கான்- அட்லீ பட தலைப்பு இதுதான்! படம் ரிலீஸ் எப்போ தெரியுமா??


jawan-movie-release-date-announced

தமிழ் சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டான ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். மேலும் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் வலம்வந்தார்.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் புதிய படமொன்றை இயக்கி, பாலிவுட் திரையுலகிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அட்லீ இயக்கிவரும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது அட்லீ மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் வெளியிடபட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி ஜவான் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.