அறிமுகமாகும் முதல் படத்தில் அஜித்துக்கு மகளாகும் பிரபல நடிகையின் மகள் ! யார் தெரியுமா?



janvi-act-as-daughter-to-ajith

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித்தின் 59வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். மேலும் இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். 

நடிகை ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது, அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டதாலும் போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான PINK படத்தின் ரீமேக் படமாகும். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Ajith Kumar   

மேலும் இப்படத்தில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். 

இந்நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. ஜான்விக்கு தமிழில் இதுவே முதல் படம் ஆகும்.

   Ajith Kumar

தல 59 படம் அடுத்த ஆண்டு  அஜித்தின் பிறந்த நாளான மே 1 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.