ஜீ.வி.பிரகாஷை புகழ்ந்து தள்ளிய ஜெயில் படக்குழு...!

ஜீ.வி.பிரகாஷை புகழ்ந்து தள்ளிய ஜெயில் படக்குழு...!


jail-shooting-over

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஓரளவு வெற்றியை கொடுத்தது தான். ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 4ஜி, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இந்நிலையில் ஜெயில் படத்தை அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த படத்தை பற்றி படக்குழு கூறுகையில் நடிகர்  ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்கள்  கொடுத்த கால்ஷீட்டில் கரெக்டாக ஷூட்டிங் வந்துவிட்டார் அதனால் படமும் சீக்கிரம் முடிந்துவிட்டது. என கூறினர்.

மேலும் படக்குழு, எங்கள் படம் மட்டும் இந்த மாதிரி இல்லை, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் எல்லா படங்களிலும் இதேபோல் தான் கரெக்டாக ஷூட்டிங் வந்துவிட்டார் என்றும் தெரிவித்தனர்.