வில்லனாக அவதாரம் எடுக்கும் நடிகர் ஜெய்! அதுவும் எந்த முன்னணி ஹீரோவின் படத்தில் தெரியுமா?jai-roled-as-villain-in-sundar-c-movie

சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதனைத் தொடர்ந்து அவர் 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. அதனைத் தொடர்ந்து அவர் சுப்ரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, பலூன், நீயா 2 பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கண்ணனாக விளங்கிய அவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் தற்போது ட்ரிபிள்ஸ் என்ற வெப்தொடரில் நடித்துள்ளார். 

Jai

இந்த நிலையில் நடிகர் ஜெய் அடுத்ததாக பிரபல முன்னணி நடிகரும், இயக்குனருமான சுந்தர்சியின் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அப்படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு பவர்ஃபுல்லான கேரக்டர் என்பதால் அவர் நடிக்க ஒப்புகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.