பில்லா படத்தில் நயன்தாராவிற்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இந்த விஜய் பட நடிகையா? தலைவி மாதிரி வருமா!!

பில்லா படத்தில் நயன்தாராவிற்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இந்த விஜய் பட நடிகையா? தலைவி மாதிரி வருமா!!


isha-gopikar-commited-in-billa-movie-first-in-nayanthar

1980ஆம் ஆண்டு நடிகர் ரஜினி டபுள் ஆக்ஷனில் செம மிரட்டலாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பில்லா.  இப்படத்தை 2007ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எல். சுரேஷ் மற்றும் பாலாஜி மீண்டும் ரீமேக் செய்து தயாரித்தனர். விஷ்ணு வரதன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் செம ஹிட்டானது.

இப்படத்தில் அஜித்தின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. மேலும் இதில் அஜித்துக்கு இணையாக ஆக்சன் ஹீரோனாக மிரள வைத்தவர்  நயன்தாரா. இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பை கண்ட பலரும் வாயடைத்துப் போனர். ஆனால் பில்லா படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை இஷா கோபிகர்தானாம்.  நடிகை இஷா கோபிகர் தமிழில் நெஞ்சினிலே படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் என் சுவாச காற்றே, ஜோடி, நரசிம்மா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

billa

அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் பில்லா படத்தில் கால்ஷீட் பிரச்சினை மற்றும் படக்குழுவுடன் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னரே நடிகை நயன்தாரா பில்லா படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் யார் நடித்திருந்தாலும் தலைவி போல வருமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.