சினிமா

ஆசிட் அடிப்பதாக மிரட்டல்! பிக்பாஸ் இசைவாணி அதிரடி புகார்! யார் மீது, என்ன நடந்தது தெரியுமா??

Summary:

ஆசிட் அடிப்பதாக மிரட்டல்! பிக்பாஸ் இசைவாணி அதிரடி புகார்! யார் மீது, என்ன நடந்தது தெரியுமா??

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர் பாடகி இசைவாணி. பெண்களாலும் அசத்தலாக கானா பாடல்களை பாட முடியும் என நிரூபித்த அவர் பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும்  சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் இவர் பாடிய வானம் விடிஞ்சிடுச்சி என்ற பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. 

இசைஞானி தனது சக கானா பாடகரான சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர். இந்த நிலையில் இசைவாணி தற்போது தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர், சதீஷ் விவாகரத்து செய்ததற்குப் பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இசைக்கச்சேரியில் எனது மனைவியை பாட வைக்கிறேன் என கூறி அவர் அட்வான்ஸ் பணம் பெற்று வருகிறார். ஆனால் நான் பாட செல்வதில்லை. அதனால் பணத்தை இழந்தவர்கள் எனக்கு போன் செய்து கேட்கிறார்கள். இவ்வாறு அவர் எனது நற்பெயருக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவரிடம் கேட்டபோது, நான் அப்படித்தான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என தகாத வார்த்தையால் திட்டியும், நீ கச்சேரிக்கு செல்லும் போது உன் மீது ஆசிட் வீசுவேன், கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுகிறார். இதனால் நான் மன உளைச்சல் அடைந்துள்ளேன். இந்நிலையில் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இசைவாணி தெரிவித்துள்ளார்.


Advertisement