2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளாரா! வைரலாகும் வீடியோவால் தொடரும் சந்தேகம்
தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளாரா! வைரலாகும் வீடியோவால் தொடரும் சந்தேகம்

ராம்லீலா,பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.
ராம்லீலா படத்தில் நடித்த போதே காதலில் விழுந்த அந்த ஜோடி 6 வருடத்திற்கு பின் கடந்த நவம்பரில் திருமணம் செய்தனர். இரண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங்க் மற்றும் தீபிகா படுகோன் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையில் அவருடைய வயிற்றுப் பகுதி பெரிதாக இருப்பதுபோல் தோன்றுவதை கேமராமேன்கள் தெளிவாக படம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பாரோ என்று சந்தேகிக்கின்றனர். அப்படியே இருந்தாலும் ஏன் அவர்கள் அதனை பற்றி என்ற தகவலும் வெளியிடவில்லை என்றும் தோன்றுகிறது.