'தனுஷின் 50' படத்தின் புதிய அப்டேட்!!

'தனுஷின் 50' படத்தின் புதிய அப்டேட்!!


is-ar-rahman-going-to-team-up-with-dhanush-for-d50

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில்  நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Fhanush

கேப்டன் மில்லர் திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தினை நடிகர் தனுஷ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன், எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரும்  நடிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைத் தவிர காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கயிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Fhanush

இப்படத்தினை பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதன்படி இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. ஏற்கனவே தனுஷ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் மரியான்,  ரஞ்சனா, அட்ரங்கி ரே, ஆகிய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.