தமிழகம் சினிமா

துணை நடிகையிடம் திட்டு வாங்கிய நயன்தாரா; அட இதுதான் விஷயமா?

Summary:

ira movie shooting - nayanthara - senthil kumari

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயாகியாக அறிமுகமான நயன்தாரா விஜய், அஜித், ரஜினி என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

மேலும் தனி ஒரு நடிகையாக இவர் நடிக்கும் படங்களும் மாபெரும் வெற்றிபெறுகிறது. தற்போது ஐரா படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் நயன்தாரா.

இந்நிலையில், ஐரா படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகை செந்தில்குமாரி கூறும்போது: இந்த படத்தின் போது, மேக்கப் போட்டு முடிந்தவர்கள் எல்லாம் வாங்க என இயக்குனர் அழைத்தார். அப்போது ஒரு பெண் என்னை இடித்துக் கொண்டு வேகமாக ஓடினார். யாருடா இது, இடிச்சுட்டு ஒரு சாரி கூட கேட்காம போறா? என திட்டினேன். 

அப்போது அருகில் இருந்த என் உதவியாளர், மேடம் அது வேறு யாருமில்லை நயன்தாரா என கூறினார். ஐய்யய்யோ! நயன்தாராவையா நான் திட்டினேன் என அதிர்ச்சி அடைந்தேன். அவர் மேக்கப்போட்டு முகம் கருப்பாக வேறு ஆள் போல் இருந்ததால் அடையாளம் தெரியாமல் திட்டிவிட்டேன் என செந்தில் குமாரி தெரிவித்துள்ளார்.


Advertisement