ஜிவி பிரகாஷின் ஐங்கரன்! வெளிவந்த சூப்பர் தகவல்! எப்போ தெரியுமா??Inkaran release date announced

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஈட்டி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி அரசு. இவரது இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஐங்கரன். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ்  இந்த படத்தை தயாரித்துள்ளார். 

ஐங்கரன் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ஐங்கரன் படம் உருவாகி ஒரு சில காரணங்களால் மூன்று ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஐங்கரன் படம் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது படம் வருகிற மே மாதம் 5 ம் தேதி  ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.