அட அட.. 50 வயதிலும் அசராத அழகு.. ரூ.50,000 மதிப்புள்ள கிரீம் தான் காரணமா?.. அழகின் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!!

அட அட.. 50 வயதிலும் அசராத அழகு.. ரூ.50,000 மதிப்புள்ள கிரீம் தான் காரணமா?.. அழகின் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!!


Indian Actress Dhapu Beauty Secret

 

தமிழ் திரையுலகில் இருவர், காதல்தேசம், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தபு. இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு 50 வயதாகும் நிலையில், இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் இவரின் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் வியந்து கேள்விகேட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த அவர், "என் அழகுக்கு உண்மையான காரணம் மனம் தான். 

Actress Dhabu

மனதில் சந்தோஷம், திருத்தி, நிம்மதியான உறக்கம் இருந்தாலே முகத்தில் அழகு தானாக வந்துவிடும். எவ்வளவு வயதானாலும் குறையவே குறையாது. நான் அழகாக இருப்பதற்காக ஒருமுறை என் மேக்கப் கலைஞரிடம் கேட்டபோது அவரிடன் ரூ.50,000 கொடுத்து முகத்தில் பூசக்கூடிய கிரீம் வாங்கினேன். 

Actress Dhabu

ஆனால் அதை ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்தினேன். அதற்குப்பின் அந்த கிரீமை உபயோகிக்கவில்லை. மனதை மகிழ்ச்சியாக வைத்தாலே அழகு வரும். எனக்கு இப்போதும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததற்கு காரணம் அதுதான். படத்தில் நடிக்கும் வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே நான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். என்றார்"