நடிகர் கமலின் இந்தியன் 2 ஷூட்டிங் எப்போ தொடங்குது?? வெளிவந்த சூப்பரான தகவல்!!

நடிகர் கமலின் இந்தியன் 2 ஷூட்டிங் எப்போ தொடங்குது?? வெளிவந்த சூப்பரான தகவல்!!



indian-2-shooting-starts-in-august

தமிழ் சினிமாவில் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டான திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில் இந்தியன் 2 எடுக்க முடிவு செய்யப்பட்டு அதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்படத்தை ஷங்கர் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்தது. இதில் ஹீரோவாக கமல் மற்றும் நடிகர் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி ஷங்கர், டெல்லி கணேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்துவிழுந்து ஏற்பட்ட விபத்து, கொரோனா என பல காரணங்களால் கடந்த இரு ஆண்டுகளாக இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

indian 2

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை எடுப்பதற்கு கமல் மற்றும் லைக்கா நிறுவனம் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.