இந்தியன் 2 படத்தின் கதறல்ஸ் பாடல் இன்று வெளியீடு; விபரம் உள்ளே.!indian-2-movie-kadharalz-song-today-release

 

இந்தியன் படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாராகி, தற்போது திரைக்கு வருகிறது. நீண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின், 12 ஜூலை 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Indian 2 song release

ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2 (Indian 2). லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், அனிரூத் இசையில் படம் உருவாகியுள்ளது. 

இதையும் படிங்க: இந்தியன் 2 இசை வெளியீடு விழாவில் சலார் 2 அப்டேட் கொடுத்த பாபி சிம்ஹா; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Indian 2 song release

கதறல்ஸ் பாடல் வெளியீடு

சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே பாரா என்ற முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அனிரூத் குரல் மற்றும் இசையில், ரோகேஷ் வரிகளில் உருவாகியுள்ள கதறல்ஸ் (Kadharalz) பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகுவதாக படத்தயாரிப்பு குழு அறிவித்து இருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு விழா; மாஸ் உடையுடன் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த கமல்.! வீடியோ உள்ளே.!