சினிமா

எனது பயணத்தில் மிகவும் ஸ்பெஷலான படம் என்றால் இந்த படம் தான்- இசையமைப்பாளர் இமான் பரபரப்பு ட்விட்!

Summary:

imman -special-visvasam

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது விஸ்வாசம் திரைப்படம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவா மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்ததால் விஸ்வாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

வீரம், வேதாளம் இரண்டும் வெற்றிப்படங்கள் என்றாலும் விவேகம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நான்காவதாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது இந்த படம்.

இந்நிலையில் தற்போது கண்ணான கண்ணே பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதைப்பற்றி இசையமைப்பாளர் இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் என் பயணத்தில் விஸ்வாசம் ஸ்பெஷலான படம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Advertisement