
Ilaiyaraja video about spb
திரையுலகில் சங்கீத ஜாம்பவானாக திகழ்ந்து வந்த பாடும் நிலா பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இவரது இந்த மரணம் அனைவரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது.
இதற்கிடையில் கடந்த மாதம் 14ஆம் எஸ்.பி.பியின் உடல் நிலை மோசமாகி எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பொழுது இசையமைப்பாளர் இளையராஜா, பாலு சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று கூறி உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று எஸ்.பி.பி உயிரிழந்ததை கேட்டு மீளாதுயரில் ஆழ்ந்த இளையராஜா, சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன் ஆனால் நீ கேட்கல,எங்க போன
நீ போன பின் இந்த உலகமே எனக்கு சூனியமாக தெரிகிறது. பேசுவதற்கு பேச்சு வரல, சொல்வதற்கு வார்த்தை இல்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. ஆனா இதுக்கு இல்லை என துயரத்துடன் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement