சினிமா

தயவுசெய்து யாரும் இப்ப வரும் சினிமா பாடல்களை கேட்காதீங்க! ஆவேசமான இளையராஜா! ஏன் தெரியுமா?

Summary:

ilaiyaraja talk about new released songs

சேலத்தில் உள்ள ஏவிஎஸ் கல்லூரி விழா ஒன்றில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார்.அங்கு அவருக்கு மாணவர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது மாணவர்கள் முன் பேசிய சிறப்புரையாற்றிய இளையராஜா தனது அனுபவங்களை குறித்து  மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

அப்பொழுது அவர் கூறியதாவது, 'இசையமைப்பாளர்கள் என்பவர்கள் எப்பொழுதும் காப்பி அடிக்காமல் சொந்த சிந்தனையோடு பாடல் இயற்ற வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை .நான் இசையமைக்க அதிகளவு நேரம் எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனால் பாடும் நிலாவே தேன் கவிதை பாடலுக்கு அதிக நேரம் எடுத்துகொண்டேன்.

மேலும் நம்முடைய பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இப்போது வெளிவரும் சினிமா பாடல்கள் கேட்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.


Advertisement