தர்பார் படத்தை பார்த்துவிட்டு, செம கோபத்துடன் ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தர்பார் படத்தை பார்த்துவிட்டு, செம கோபத்துடன் ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


ias-officer-tweet-against-darbar

பேட்ட படத்தை தொடர்ந்து நடிகர்  ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.   மேலும் அப்படத்தில் அவர் மும்பைபோலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 

இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

IAS Officer

மேலும் லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையி ல் இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதனை தலைவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ஐயா தமிழ் இயக்குனர்களே.. இனிமேல் ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலம் வச்சு எந்த படமும் எடுக்காதீங்க. உங்க லாஜிக் ஓட்டையில் எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது என பதிவிட்டுள்ளார்.