சினிமா

அந்த பாடலை உடனே நீக்குங்க! எதற்கும் துணிந்தவன் படக்குழு மீது அதிரடி புகார்!! ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

அந்த பாடலை உடனே நீக்குங்க! எதற்கும் துணிந்தவன் படக்குழு மீது அதிரடி புகார்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படம் கடந்த மார்ச் 10 வியாழன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ராதிகா, சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே அளவு இந்த படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா பாடல் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும், அதனை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் அகில இந்திய நேதாஜி கட்சியினர்
கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 


Advertisement