
கிருபை கிருபை கிருபை.! வெளிவந்தது அசோக் செல்வன்- ப்ரியா பவானி சங்கரின் ஜாலியான ஹாஸ்டல் ட்ரைலர்!! இதோ..
சின்னத்திரையில் அறிமுகமாகி, பின்பு வெள்ளித்திரையில் ஹீரோயினாக களமிறங்கி தற்போது ஏராளமான படங்களை கைவசம் கொண்டு பிரபலமாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவர் தற்போது நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஹாஸ்டல். இந்த படத்தில் நாசர், சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘அடி கேப்யாரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்துள்ளார். அப்சர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பாபோ சசில் இசையமைத்துள்ளார்.
ஆண்கள் கல்லூரி விடுதியில் பெண் ஒருவர் நுழைந்து கலகலப்பாக நடைபெறும் நிகழ்வுகள் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஹாஸ்டல் படத்தின் கலகலப்பான ஜாலியான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement