சினிமா

சூப்பர் சிங்கர் பூவையாருக்கு மீண்டும் அடிச்சது லக்! என்ன விஷயம் தெரியுமா?

Summary:

Hip hop aadhi planned to give chance for vijay tv poovaiyar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஓன்று சூப்பர் சிங்கர். மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு உள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களான பிரபலங்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.  தற்போது குழந்தைகளுக்கான சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது.

https://cdn.tamilspark.com/media/18056hvl-Poovaiyar-collage.jpeg

தற்போது ஒளிபரப்பாகிவரும் சீசனில் சென்னையை சேர்ந்த பூவையர் என்ற சிறுவன் பங்கேற்று, கானா பாடல்கள் பாடி மக்களை அசதி வருகிறார். மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களிலும் பூவையாரும் ஒருவர். விஜய் தொலைக்காட்சி மூலம் கிடைத்த இந்த வாய்ப்பில் தாள்கபதி 63 இல் நடிக்கும் அதிர்ஷ்டம் பூவையாருக்கு கிடைத்தது.

https://cdn.tamilspark.com/media/18056hvl-65450628.jpg

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஆப் தமிழா ஆதி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பூவையூருடன் சேர்ந்து பாடல் பாடிய ஆதி, தனது அடுத்த பாடலில் கட்டாயம் பூவையரை பாட வைப்பேன் என்று உறுதியளித்துள்ளார். இதன்மூலம் பூவையாருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.Advertisement