இந்தியா சினிமா

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.. சோகத்தில் ரசிகர்கள்.!

Summary:

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.. சோகத்தில் ரசிகர்கள்.!

பிரபல நடிகை பயணித்த கார் 2 கார்களின் மீது மோதி விபத்திற்குள்ளான நிலையில், நடிகைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பன்வெல் பகுதியில் பிரபல இந்தி நடிகையான மலாய்கா அரோரா சென்ற ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், விரைவுச்சாலையில் சென்ற 2 கார்களின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில், நடிகைக்கு நெற்றி மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. 

நடிகை நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Malaika Arora


Advertisement