சினிமா

சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Summary:

Hero tamil movie review

மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது ஹீரோ திரைப்படம். பள்ளியில் படிக்கும்போதே சூப்பர் ஹீரோ போன்று ஆக வேண்டும் என ஆசை படுகிறார் சக்தி(சிவகார்த்திகேயன்). நன்றாக படிக்கும் சக்தி ஒரு கட்டத்தில் தன் சான்றிதழை விற்க வேண்டி வருகிறது.

அதன்பிறகு போலி சான்றிதல்கள் தயாரித்து விற்பனை செய்துவருகிறார் சக்தி. ஒரு கட்டத்தில்  ஊழல் கல்வி முறையால் இவர் தனது தங்கையாக பார்க்கும் இவானா உயிர் இழக்கிறார். தனது தங்கையின் இறப்பிற்கு நியாயம் தேடும் சக்தி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார்.

சூப்பர் ஹீரோவாக மாறும் சக்தி சத்யமூர்த்தி(அர்ஜுன்) போன்ற பணக்காரர்களிடம் இருந்து திருடி கல்வி நிறுவனம் ஒன்றை துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். இது வில்லன் மகாதேவனுக்கு பிடிக்கல.

சக்தியை சூப்பர் ஹீரோவா காட்டும் காட்சிகள் அந்த அளவுக்கு எடுபடவில்லை என்றே கூறலாம். சிம்பிள், அழகு என படத்தின் கதாநாயகி சற்று கூடுதல் பலம் சேர்த்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான்.

ஆக மொத்தத்தில், சில லாஜிக் தவறுகள் இருந்தாலும் ஹீரோ படம் பார்க்கும் படி உள்ளது.


Advertisement