சினிமா

படத்தில் மட்டும்தான் வில்லன்! நிஜத்தில் இவர்தான் மாஸ் ஹீரோ! நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 31 வது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களும் வேலை இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் நடந்து செல்கின்றனர். 

இந்நிலையில் பல பிரபலங்களும் இத்தகைய தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சோனு சூட் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

கொரோனோவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க தனது நட்சத்திர விடுதியை கொடுத்தார். மேலும் உணவின்றி தவிக்கும்  சுமார் 45 ஆயிரம் ஏழை மக்களுக்கு தினமும்  உணவு வழங்கி வருகிறார்.

மேலும் தற்போது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த செலவில் ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கேரளாவில் துணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 150 வெளிமாநில பெண் தொழிலாளர்களை தனது செலவில் விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். இத்தகைய நல்ல மனம் கொண்ட நடிகர் சோனு சூட்டிற்கு விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்


Advertisement